படப்பிடிப்பு தளத்தில் ஹீரோவை மடியில் உட்கார வைத்த பிரபல நடிகை!

சனி, 31 மார்ச் 2018 (11:10 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கதாநாயகியாக நடித்து வருகிறார். அவர் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய மடியில் கதாநாயகனை உட்காரவைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஸ்ரீதேவி மகள் ஜான்வி இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் ‘தடக்’ படத்தின் நாயகனாக இஷான் கட்டார் நடித்து வருகிறார். இவர், ஷாகித் கபூரின் தம்பி ஆவார். கரண்ஜோஹர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஜான்வி தனது தாயின் திடீர் மறைவை மறக்கும் விதத்தில் படப்பிடிப்பு தளத்தில் கலகலப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்து வருவதாக கூரப்படுகிறது.
 
இந்நிலையில் இவருடன் ஜோடியாக நடிக்கும் நாயகன் இஷான் கட்டாரிடம் ஜாலியாக பழகுவதோடு, சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின்போது, ஜான்வி தனது மடியில் இஷானை உட்கார வைத்துக்கொண்ட புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஜான்வியும்,  இஷானும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது. ஆனால் அதில் உண்மையில்லை என்றும், அவர் அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவர். வேறு காரணம் இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்