பாகுபலி ஹீரோவின் விருப்பத்தை ஏ.ஆர். ரஹ்மான் நிறைவேற்றுவாறா ?

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (17:47 IST)
இந்திய சினிமாவுக்கு  உலக அளவில் பரவலான ஒரு மார்க்கெட் உருவாக்கி தந்து வசூல் மழை பொழிந்த படம் பாகுபலி. இப்படத்தை ராஜமௌலி இயக்க, பிரபாஸ், ராணா உள்ளிட்ட நடிகர்கள் நடித்தனர்.

இப்படத்தை அடுத்து பிரபாஸ் சாஹோ என்ற பிரமாண்ட படத்தில் நடித்தார். இப்படத்திற்கு   சங்கர் – எஷன் லாய் கூட்டணி இசையமைத்தது. பின்னணி இசை ஜிப்ரான் அமைத்தார்.

இதையடுத்து, பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம். இப்படத்தில் முதல்பார்வை சமீபத்தில் வெளியானது. ஆனால் இசையமைப்பாளர் பெயர் இல்லை. இப்படத்திற்கு பிரபாஸ் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்ற ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியானது. பிரபாஸீன் ஆசையை ஏ.ஆர்.ரஹ்மான் நிறைவேற்றுவாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்