வாடிவாசல் படத்தில் ஜுராஸிக் பார்க் படக்குழுவினர் வேலை செய்கின்றனர் –தாணு கொடுத்த அப்டேட்!

vinoth

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (07:51 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 படத்தில் . இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்கவில்லை. அதனால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் தாணு, “கடந்த மாதம் நான், சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகிய மூவரும் படம் பற்றி பேசினோம். படம் கூடிய விரைவில் தொடங்கும். படத்துக்கான அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் லண்டனில் நடக்கிறது. ஜுராஸிக் பார்க் படத்தில் டைனோசர்களை அனிமேட்ரானிக்ஸில் உருவாக்கிய குழு வாடிவாசல் படத்தில் வேலை செய்கிறது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்