இதுகுறித்து தங்கர் பச்சான் தனது அறிக்கையில், கொரோனா தொற்றால் மருத்துவமனைகள் திணறிக்கொண்டுள்ளன. இரவு பகலாக மணிக்கணக்கில் காத்திருந்து உடல்கள் எரியூட்டப்படுகின்றன. தடுப்பூசிக்காக பயன்படுத்துகிற ரெம்டெசிவி மருத்து நோயைக் குணப்படுத்தாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக நான் அனுபவித்துவரும் வேதனைதான் என்னை எழுத வைத்துள்ளது. என் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். எனவே ஒவ்வொருநாளும் மக்கள் அச்சத்துடனும் வேதனையுடனும் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய திமுக அரசின் நடவடிக்கைகளும் செயல்திட்டங்களும் தெம்பை அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.