இந்தியில் பாஸிட்டிவ் விமர்சனங்கள்… தங்கலான் படத்துக்குக் கூடுதல் திரைகள்!

vinoth

புதன், 11 செப்டம்பர் 2024 (11:58 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. ஆனால் அதே நாளில் வெளியான டிமாண்டி காலணி படமும் சூப்பர் ஹிட் ஆனதால் தங்கலான் வசூல் இரண்டாவது வாரத்தில் குறைந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் விமர்சன ரீதியாக படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் பாராட்டிவருகின்றனர். ஆனாலும் படத்தின் இரண்டாம் பாதி தெளிவற்றதாக இருந்ததாக சில குறைகளும் சொல்லப்பட்டன. இதனால் படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் மூன்று வாரம் கழித்து தற்போது தங்கலான் இந்தியில் டப் ஆகி ரிலீஸாகியுள்ளது. முதலில் 300 திரைகளில் வட இந்தியாவில் ரிலீஸான இந்தபடம் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றதை அடுத்து தற்போது அதிக திரைகளில் திரையிடப்பட்டு வருகிறது. போட்டிக்கு தற்போது இந்தியில் பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் இந்த வாரம் தங்கலான் நல்ல வசூலைப் பெறும் என சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்