"தளபதி 63" கதை என்னுடையது! சர்ச்சையில் சிக்கிய அட்லீ!

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (17:11 IST)
அட்லீ இயக்கும் "தளபதி" 63 படத்தின் கதை என்னுடையது என்று கூறி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


 
வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு பழைய படங்களை காபி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று ஒருவர் அட்லீ மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 
 
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜிஉள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பார் தகவல் வெளிவந்தது. 
 
இந்நிலையில் தற்போது  கோபி செல்வா என்ற குறும்பட இயக்குனர் ஒருவர், பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து ஒரு குறும்படம் இயக்கியுள்ளதாகவும், அதை வைத்து தளபதி 63 கதையை உருவாக்கியிருக்கிறார் என அட்லீ மீது குற்றம்சாட்டியுள்ளார்.


 
இதற்கு  முன்னரும் விஜய்யின் சர்கார் படத்திற்கும் இதே போன்ற பிரச்சனை உருவாகி, இறுதியில் படம் வெளியாகும்போது சமரசம் ஏற்பட்டு பின்னர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்