''ஸ்பா, மசாஜ் '' சென்டரில் பாலியல் தொழில்.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது!

வெள்ளி, 21 ஜூலை 2023 (15:00 IST)
திருச்சி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட ஸ்பாக்கள்  இயங்கி வருகின்றன. அதில், ஸ்பா,மசாஜ்,. ஸ்டிரீமிங் ஆகியவவை நடந்து வருவதாகவும்,  இதில், சிலவற்றில் பாலியல் தொழில் நடந்து வருவதாக  புகார்கள் எழுந்தன.

இந்த  நிலையில், திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் தி சைன் என்ற ஸ்பாவில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விபச்சார தடுப்பு பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் கருணாகரன் ஸ்பா சென்டரில், அங்கிருந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். சில பெண்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், அங்கு, உரிய அனுமதியின்றி பல ஆண்டுகளாக ஸ்பா இயங்கி வருவதுடன், பாலியல்தொழில் நடந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 2 பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்., மேலாளர் பெண்ணை கைது செய்தனர். இந்த ஸ்பாவின் உரிமையாளர் வயலூர் பகுதியைச் செந்தில் என்பதும், அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மத்திய பகுதி நிர்வாகி என்ற தகவல் வெளியாகிறது. இவரை கைது செய்த போலீஸார் இரவே அவரை  வெளியே விட்டதாகவும்  கூறப்படுகிறது.

இவர் மீது நடடிக்கை எடுக்க வேண்டுமென்று விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்க செயலாளருக்கு ஆடியோ மூலம் புகார் அளித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்