‘பீஸ்ட்’ 4வது கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம்: எங்கே தெரியுமா?

புதன், 1 செப்டம்பர் 2021 (13:26 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது 
 
இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட செட்டில் ‘பீஸ்ட்’ படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாகவும் இதில் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னையில் இன்னும் ஒரு சில நாட்களில் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் படக்குழுவினர் டெல்லி செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்