தலைவி படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிவைப்பு!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (07:50 IST)
கங்கனா ரனாவத் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கி இருக்கும் திரைப்படமான தலைவி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகை கங்கனா நடிப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறு தலைவி என்ற பெயரில் மூன்று மொழிகளில் உருவாகி ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்