அஜித்தை மீண்டும் இயக்குகிறாரா கிரீடம் இயக்குனர்!

திங்கள், 8 பிப்ரவரி 2021 (18:55 IST)
அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் இப்போது ஹெச் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் அதை கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது அதிரடி மாற்றமாக அஜித்தின் அடுத்த படத்தை கிரீடம் படத்தை இயக்கிய ஏ எல் விஜய் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் முதல் படமாக அமைந்த கிரிடம் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்