'தல..விடுதலை": விவேகம் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (06:37 IST)
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் கடந்த சில நாட்களாக இரவுபகலாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வரும் 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. 'தல...விடுதலை என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ளார்.
 
ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பாடல்களின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் வெகுவிரைவில் அனைத்து பாடல்களும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்