விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் கலந்துக்கொண்டார்.
தல 59 படத்தை சதுரங்கவேட்டை புகழ் இயக்குனர் H.வினோத் இயக்குகிறார். இப்படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தல அஜித்துடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களை தந்தவர் யுவன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஆர்ட் டைரக்டராக கதிர் பணியாற்றவிருக்கிறார். இதனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதுரங்கவேட்டை படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்த வினோத், தல 59 படத்தையும் சிறப்பாக கொடுப்பார் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் , இப்படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர் போனிகபூர் முன்னிலையில் இன்று துவங்கப்பட்டு படத்தின் வேலைகள் மும்முரமாக ஆரம்பமானது .