முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள்

வியாழன், 10 பிப்ரவரி 2022 (23:53 IST)
ஆந்திர மாநிலத்தில் சினிமா டிக்கெட்டுகள் விலை குறைப்பால் தெலுங்கு சினிமாத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான வையெஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

 இந்நிலையில் சமீபத்தில் அங்கு சினிமா டிக்கெட்டுகள் விலை குறைக்கப்பட்டது. இதனால் போதுமான வருமான ஈட்டமுடியவில்லை என தெலுங்கு சினிமாத்துறையினர் அதிருப்தி தெருவித்துள்ளனர். இதையடுத்து இன்று இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்