மும்பையை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை கெஹனா வசிஸ்த் என்பவர் சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். தொடர்ச்சியாக 48 மணி நேரம் படப்பிடிப்பு மற்றும் சரியாக உணவு, உறக்கம் இல்லாத காரணத்தால் திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார்
மேலும் நடிகை கெஹனா வசிஸ்த்துக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் அது மட்டுமன்றி ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்ததாகவும் இதனால் அவர் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் தற்போது அவருக்கு தங்களால் முடிந்தவரை உயர்தர சிகிச்சை அளித்து கொண்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகை கெஹனா வசிஸ்த் நலமுடன் திரும்ப வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்