சென்னையில் நாளை டாஸ்மாக் கடை திறப்பு - கமல்ஹாசன் எதிர்ப்பு

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (20:44 IST)
தமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.  இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை ரூ. 248 கோடி ஆகும்.

இந்நிலையில் டாஸ்மாக் கடையை சென்னையில்  நாளை திறப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்

காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம்  சென்றவருக்கும் கொரோனா,  பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது.

மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? எனப் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜு அரசியலில் கமல்ஹாசன் எல்.கே.ஜிதான் எனதெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்