இயக்குனராகும் எஸ் ஏ ராஜ்குமார் – கதாநாயகியாக டாப்ஸி!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (15:33 IST)
நடிகை டாப்ஸி இப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகையான டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ஹசீன் தில்ருபா திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது தமிழில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்