கொரோனாவால் படம் வரலை; முடங்கியதா தமிழ் ராக்கர்ஸ்? நெட்டிசன்கள் ட்ரெண்டிங்

திங்கள், 19 அக்டோபர் 2020 (17:33 IST)
இந்திய திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யும் தமிழ்ராக்கர்ஸ் தளம் முடங்கியதாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய மொழிகளில் வெளியாகும் அனைத்து படங்களையும் உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றம் செய்து திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாய் இருந்தது தமிழ்ராக்கர்ஸ் தளம். தமிழ்ராக்கர்ஸை முடக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்பட பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்த நிலையிலும் ஒவ்வொரு நாட்டு டொமெய்னிகளிலும் மாறி தொடர்ந்து படங்களை வெளியிட்டு வந்தது தமிழ்ராக்கர்ஸ்.

இந்நிலையில் சமீப காலமாக கொரோனா காரணமாக திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக தொடங்கியுள்ளன. அதற்கான சப்ஸ்க்ரிப்ஷன் தொகையும் குறைவாக இருப்பதால் பலரும் ஓடிடி தளங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்ராக்கர்ஸ் தளம் முடங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்துள்ளனர். தமிழ்ராக்கர்ஸ் ஒரேயடியாக முடங்கி விட்டதா அல்லது வேறு டொமைன்களுக்கு மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து சரிவர தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்