தமிழகத்தில் முதன் முறையாக திரைப்பட தொழில் சார்ந்த இன்குபேஷன் மையம் துவக்கம்!

J.Durai
வியாழன், 25 ஜூலை 2024 (15:18 IST)
கோவை இரத்தினம் கல்லூரியில் இளம் தலைமுறையினர்களின் தொழில் நுட்ப திறன்களை மேம்படுத்தும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
 
இதன் தொடர்ச்சியாக இளம் தலைமுறையினரின்  சினிமா தொடர்பான கனவுகளை நனவாக்கும் விதமாக கோவை இரத்தினம் கல்லூரி வளாகத்தில் சினிமா இன்குபேஷன் சென்டர் துவங்கப்பட்டது.
 
தமிழகத்தில் புதிய முயற்சியாக முதன் முறையாக துவங்கப்பட்ட இதன் துவக்க விழா இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் ஏ செந்தில் தலைமையில் நடைபெற்றது.இதில் துணை தலைவர் முனைவர் நாகராஜ்,தலைமை செயல் அதிகாரி முனைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
சிறப்பு விருந்தினர்களாக,
பிரபல நடிகர், பிக் பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன்,ஒளிப்பதிவாளர் செந்தில் குமார்,இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு,நடிகர் தயாரிப்பாளர் மாதம்பட்டி ரங்கராஜ்,கிளஸ்டர் ஸ்டுடியோ அரவிந்தன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
புதிய மையம்  குறித்து கல்லூரியின் தலைவர் மதன் செந்தில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில்,திரைப்பட துறையில் ஆர்வமுள்ளவர்கள்,
 தங்கள் திரைப்பட கருத்துக்களை வளர்த்துக் கொள்ளவும், திறமையான திரைக்கதையை எழுதவும் இந்த  மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், மேலும்
அனுபவம் வாய்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து வழிகாட்டுதல் மற்றும் ஆதரவைப் பெறலாம்.என தெரிவித்தனர்.
 
மேலும், திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி அறிய பட்டறைகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் இங்கு நடத்த உள்ளதாகவும்,இதில் திரைப்படம் சார்ந்த நடிகர்கள்,தயாரிப்ஙாளர்கள்,தொழில் நுட்ப வல்லுனர்கள் என அனுபவம் வாய்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
 
திரைப்படங்களை தயாரிக்க  நிதியுதவி பெறுவது முதல், தங்கள் திரைப்படங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்வது வரையிலான  வர்த்தக விவரங்களை,இந்த திரைப்பட வளர்ப்பு மையம் தெரிந்து கொள்ள முடியும் என குறிப்பிட்ட அவர்,  திறமையான மற்றும் ஆர்வமுள்ள இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, தங்கள் கனவுகளை நனவாக்க உதவும் சிறந்த மையமாக இது இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்