அவருக்கே ஹீரோ கிடைக்கலையா? கதையை வச்சிகிட்டு அல்லாடும் முருகதாஸ் !

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:39 IST)
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க எந்த முன்னணி ஹீரோவும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக முருகதாஸ் சொன்ன கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் வேறாம்.

தமிழ் சினிமாவில் ஷங்கருக்கு இணையாக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவர் முருகதாஸ். அவர் இயக்கிய தர்பார் படத்துக்கு அவருடைய சம்பளம் 30 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படம் பிளாப் ஆனதால் விஜய் படத்துக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் என ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் கொரோனா பாதிப்பை அடுத்து மேலும் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சொல்லியுள்ளது தயாரிப்பு நிறுவனம். அதற்கு முருகதாஸ் ஒத்துக்கொள்ளாததால் தான் படத்தில் இருந்து விலகினாராம்.

இந்நிலையில் வேறு ஹீரோக்களை வைத்து படத்தை ஆரம்பிக்கலாம் என நினைத்த முருகதாஸுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அவரது இயக்கத்தில் நடிக்க இப்போது எந்த முன்னணி ஹீரோவும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் அவரின் சமீபத்திய படங்களான ஸ்பைடர் மற்றும் தர்பார் ஆகிய படங்களின் தோல்விதான் என சொல்லப்படுகிறது. மேலும் அவரின் சம்பளத்துக்கு முன்னணி நடிகர்கள் நடித்தால்தான் அந்த படத்தை வியாபாரம் செய்ய முடியும். அதனால் இரண்டாம் நிலை கதாநாயகர்களை வைத்துக்கூட படம் இயக்க முடியாத சூழலில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்