அக்கட தேசத்தில் எதிர்ப்பு – சென்னைக்கு கிளம்பிவந்த படக்குழு

Webdunia
வியாழன், 18 மே 2017 (18:23 IST)
இரண்டெழுத்து இனிஷியல் கொண்ட இயக்குநர் அக்கட தேசத்து நடிகரை வைத்து இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டதால் மூட்டை முடிச்சை கட்டிகொண்டு சென்னைக்கு வந்துவிட்டாராம்.


 

 
இரண்டெழுத்து இனிஷியல் கொண்ட இயக்குநர், அக்கட தேசத்து நாயகனை வைத்து இரண்டு மொழிகளில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டாலும், அதன் கிளைமாக்ஸ் இன்னொரு படத்தில் வந்துவிட்டதால், மறுபடியும் வேறொரு கிளைமாக்ஸை எடுத்து வருகின்றனர்.
 
இதன் ஷூட்டிங், அக்கட தேசத்தில் நடந்து வந்தது. ஆனால், அங்கு ஷூட்டிங் நடத்தக் கூடாது என அங்குள்ள அரசியல்வாதிகள் எதிர்க்க, மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டனர். ஆனால், அங்குள்ள மருத்துவமனையில் ஷூட்டிங் நடத்த சட்டச் சிக்கல் ஏற்பட்டதால், சென்னை வந்தோம் என்று சமாளிக்கிறார்களாம் படக்குழுவினர். எதற்காக இந்தப் படத்தை அரசியல்வாதிகள் எதிர்த்தனர் என்று அக்கட தேசத்தில் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்