வொர்க் ஸ்டார்ட் பண்ணலாமாம்... தமிழ் திரைத்துறையினருக்கு ஹேப்பி நியூஸ் கிடைச்சாச்சு!

Webdunia
சனி, 9 மே 2020 (07:52 IST)
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கு ஒரு நாள் பொழுதே திண்டாட்டமாக செல்கிறது. திரைத்துறையில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்த அத்தனை பேருடைய வாழ்க்கையும் அம்போ என்று ஆகிவிட்டது. வருமானம் இல்லாததால் பெரிய நடிகர்களிடம்  உதவி கேட்டு வருகின்றனர். இன்று முடிந்துவிடும், நாளையுடன் முடிந்துவிடும் வேலைக்கு போகலாம் என எதிர்பார்த்து எதிர்பார்த்து குடும்ப சூழ்நிலை இன்னும் மோசமாகிக்கொண்டுதான் செல்கிறது.

இதனால் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளான Post Production வேலைகளான டப்பிங், எடிட்டிங், விஷூவல் கிராஃபிக்ஸ், பின்னணி இசை, சவுண்ட் மிக்சிங் ஆகிய பணிகளை முதல்வரின் அனுமதியின் கீழ் வருகிற மே 11 ம் தேதி வரை செய்யவுள்ளனர். இந்த வேலைகளை செய்ய  10 முதல் 15 நபர்கள் கொண்ட குழுவை மட்டுமே அமர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் Post Production பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் அப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு அனுமதி சீட்டுக்களை கொடுத்து முகக் கவசம், கிருமி நாசினி உபயோகித்துதல், சமூக விலகலை கடைபிடித்தல் உள்ளிட்ட அனைத்தையும் பின்பற்றி வேலை செய்யுமாறு கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்