ஆந்திராவில் அமைச்சரான ரோஜா… தமிழ் திரையுலகினர் நடத்தும் பாராட்டு விழா!

வியாழன், 28 ஏப்ரல் 2022 (09:47 IST)
ஆந்திராவில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக நடிகை ரோஜா சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அவர், இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். மெலும் ஆந்திராவில் அரசியலிலும் ஈடுபட்டார். சமீபத்தில் YSR காங்கிரஸ் வெற்றி பெற்று ஆந்திராவில் ஆட்சி நடத்தி வருகின்றது. இதில் ரோஜாவும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியுள்ள நிலையில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளதை அடுத்து பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி திருமதி ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர்.

இதில் தமிழ் திரையுலகின் முன்னணிக் கலைஞர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்