சிறைவாசிகளை நல்வழிப்படுத்த சீர்திருத்த சிறகுகள் திட்டம்: அமைச்சர் ரகுபதி

புதன், 27 ஏப்ரல் 2022 (18:43 IST)
சிறைவாசிகளை நல்வழிப்படுத்த சீர்திருத்த சிறகுகள் என்ற திட்டம் அமைக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
 
இது குறித்து சட்டமன்றத்தில் அவர் பேசியபோது அனைத்து வகையான சிறைவாசிகளையும் நல்வழிப்படுத்தி மறுவாழ்வு அளிக்க சீர்திருத்த சிறகுகள் என்ற புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார் 
 
மேலும் சிறைவாசிகள் ஈட்டும் ஊதியத்திலிருந்து அவர்கள் கணக்குக்கு செலுத்தப்படும் விகிதம் உயர்த்தப்படும் என்றும் சிறைவாசிகளின் தேநீர் விடுதியில் வாரம் ஒன்றுக்கு சிறைவாசிகள் செலவு செய்யும் தொகையை உச்சவரம்பு உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார் 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்