தாம்பரம் - செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம்: அமைச்சர் தகவல்

புதன், 27 ஏப்ரல் 2022 (15:58 IST)
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் நிலையில் இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க மத்திய அரசுடன் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார் 
 
சட்டசபையில் இன்று இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் வேலு பண்டிகை காலங்களில் பொது மக்கள் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் போதும், சென்னைக்கு மீண்டும் திரும்பும் போதும் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
 
இதனை தடுக்க உயர்மட்ட பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார். அதேபோல் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்