ரிஸ்க் எடுக்கிறது விஸ்கி சாப்ட்ற மாதிரி...

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (15:39 IST)
கடந்த இரண்டு வருடங்களாக நடிப்பில் மட்டும் பிஸியாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ். தயாரிப்பு பற்றி யோசிக்கவில்லை.


 


தயாரிக்கிற படமெல்லாம் பல கோடி கடன் வைத்து சென்றால் எப்படி அதைப்பற்றி யோசிப்பதாம்.
 
இரண்டு வருடங்களில் கடனையெல்லாம் அடைத்திருப்பார் போலிருக்கிறது. மனிதர் மீண்டும் படம் தயாரிக்க தயார்.
 
பிரகாஷ்ராஜ் கடைசியாக தயாரித்தது மலையாளத்தில் வெளியான சால்ட் அண்ட் பெப்பர் படத்தின் ரீமேக்கான உன் சமையல் அறையில். மலையாள படத்தின் ஆன்மாவை தமிழ் கடத்த முடியாததால் படம் தோல்வி. கன்னடத்திலும் இப்படத்தை தயாரித்திருந்தார்.
 
இந்த பலத்த அடியிலிருந்து மீண்டெழுந்து கன்னட படமொன்றை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். நல்ல படங்களை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற பிரகாஷ்ராஜின் மனசுக்கு ஒரு சல்யூட். ஆனால், அதனை எப்படி செய்வது என்பது தெரியாதது அவரது பலவீனம்.
 
எப்படியோ.. ரிஸ்க் எடுக்கிறது எனக்கு விஸ்கி சாப்பிடுற மாதிரின்னு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
 
எவ்வளவு நாளைக்கு ரிஸ்க் ரஸ்க்குன்னு சொல்றது?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்