இவர் நடிகர், டப்பிங் கலைஞர், பேச்சாளர், என பன்முகம்கொண்டவர். இவர் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தலைவராகப் பொறுப்பேற்று வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், சினிமாவில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.
இதுகுறித்து நடிகர் நாசர் தனது சமூக வலைதளப்பக்கத்தில்,
என்னை பற்றி வெளியாகும் வதந்திகள் உண்மை இல்லை. தமிழில் 3, இந்தியில் 3, தெலுங்கில் 3படங்களில் நடித்து வருகிறேன். தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.