#MeToo: அமலாபாலுக்கு போன் செய்து என்ன சொன்னார் சுசி கணேசன்?

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (20:16 IST)
இயக்குனர் சுசிகணேசன் மீது சமீபத்தில் கவிஞரும், துணை இயக்குனருமான லீலா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். 
 
அதனை தொடர்ந்து நடிகை அமலாபாலும், சுசி கணேசன் மீது குற்றச்சாட்டை சுமத்தினார். இதுகுறித்து அமலாபால் கூறியது, இயக்குனர் சுசிகணேசனின் இரட்டை அர்த்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்துள்ளேன். 
 
இதை வைத்து அந்த படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த லீலா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது என்று டிவிட்டரில் அறிக்கை ஒன்றை பதிவிட்டார். 
 
இந்நிலையில், மீண்டும் ஒரு ட்விட்டை அவர் பதிவிட்டுள்ளார். அதில், சுசி கணேசன் எனக்கு போன் செய்தார். மீ டூ விவகாரத்தை குறித்து எனது நிலையை எடுத்துக்கூற அழைப்பை எடுத்து பேசிய  போது ஒரு கட்டத்திற்கு மேல் அவர் என்னை அவதூறாக பேச துவங்கினார். அவரது மனைவி இதை கேட்டு சிரித்தார். பின்னர் இருவரும் என்னை அவதூறாக பேசினர். ஆனால், நான் இதற்கெல்லாம் பயப்படப்போவது இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்