பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று மதியம் 2 மணிக்கு திடீரென மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி முதல் கிரிக்கெட் வீரர்கள், திரையுலகினர் உள்பட பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கடிதம் எழுதி வைக்கவில்லை என்பது மும்பை போலீசாரால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் சுஷாந்த் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக செய்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் தனது தனது சிறுவயதிலேயே இறந்த தாயார் கொடுத்து மிக உருக்கமாக பதிவு செய்துள்ளார். இந்த கடைசி பதிவில் தாய் குறித்து சுஷாந்த் சிங் செய்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது