ஐ லவ் யூ மாமான்னு கூப்பிடு... நடிகையை வற்புறுத்திய சிம்பு பட இயக்குனர் விளக்கம்!

திங்கள், 4 ஜனவரி 2021 (14:10 IST)
சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையில் உருவான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படம்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. 
 
இதற்கிடையில் படத்தின் இறுதிக்கட்ட வேளைகளில் அதிக கவனத்தை செலுத்தி வரும் படக்குழுவினர் சமீபத்தில் இதன் இசைவெளியீட்டு விழா நடத்தி படத்தை ப்ரோமோஷன் செய்தனர். அப்போது ,சிம்பு நிதி அகர்வால் , இயக்குனர் சுசீந்திரன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் பங்கேற்று படத்தை குறித்த அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டனர். 
 
அப்போது படத்தின் ஹீரோயின் நிதி அகர்வால் பேசும்போது குறுக்கிட்டு பேசிய இயக்குனர் சுசீந்திரன், சிம்புவை பார்த்து மாமா ஐ லவ் யூ என்று கூறும்படி சொன்னார். ஆனால், அதனை அவர் காதிலே போட்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து ஒரு இயக்குனர் நடிகையை இப்படி வற்புறுத்துவதாக என சர்ச்சைகள் எழுந்தது. 
 
இந்நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் சுசீந்திரன், படத்தில் கதாநாயகி சிம்புவை துரத்தி துரத்தி காதலித்து மாமா ஐ லவ் யூ , மாமா ஐ லவ் யூ என்று பார்க்கும்போதெல்லாம் கூறுவார். அந்த காட்சியை தான் நான் மேடையில் கூறினேன். ஆனால், அதை பலரும் தவறாக புரிந்துக்கொண்டனர் என விளக்கம் கொடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்