மகனுக்கு ரேக்ளா ரேஸை காண்பித்த சூர்யா

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (07:50 IST)
ரேக்ளா ரேஸ் என்பது தமிழகத்தில் காலம் காலமாக நடந்து வரும் ஒரு விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான இந்த விளையாட்டை சினிமாக்காரர்கள் அதிகம் கண்டுகொள்ளவில்லை என்பது வருந்தத்தக்க ஒரு அம்சமே

ஆபாவாணன் இயக்கிய 'உழவன் மகன்' படத்தில் அனைவரையும் அசரும் வகையில் ஒரு ரேக்ளா ரேஸ் காட்சியை படமாக்கியிருப்பார். அதற்கு பின்னர் இந்த ரேஸ் பிரமாண்டமாக வரவிருப்பது கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் தானாம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா நடிக்கும் 'கடைக்குட்டி' படத்தின் ரேக்ளா ரேஸ் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தபோது, சூர்யா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மகன் தேவ் உடன் சென்று ரேக்ளா ரேஸ் என்றால் எப்படி இருக்கும் என்று விளக்கியுள்ளார். இதனை தனது டுவிட்டரிலும் சூர்யா பதிவு செய்துள்ளார்.

கார்த்தி, சாயிஷா சாய்கல், பிரியா பவானி சங்கர், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானு ப்ரியா, மௌனிகா மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு. இமான் இசையமைக்கிறார். வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்