சென்னையில் இன்று தொடங்குகிறது கங்குவா படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்!

வியாழன், 9 நவம்பர் 2023 (07:53 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஆந்திராவின் ராஜமுந்திரி காடுகளில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை சமீபத்தில் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் சில முக்கியமான காட்சிகளை படமாக்கிய படக்குழு, இன்று சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை தொடங்க உள்ளது. இங்கு 15 நாட்கள் ஷூட்டிங் நடக்க உள்ள நிலையில் இதோடு சூர்யாவின் காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்