சூர்யாவின் கங்குவா படத்தில் அண்டர்வாட்டர் சண்டைக் காட்சி!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (12:13 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஆந்திராவின் ராஜமுந்திரி காடுகளில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றை சமீபத்தில் படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் மிகவும் ஸ்பெஷலான நீருக்கடியில் நடக்கும் சண்டைக் காட்சி ஒன்றை படக்குழு படமாகியுள்ளதாகவும், படம் ரிலீஸ் ஆனதும் இந்த ஸ்டண்ட் காட்சி ரசிகர்களால் வெகுவாக சிலாகிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்