சூர்யா, ஜோதிகா, ஞானவேல் மீது நீதிமன்றத்தில் வழக்கு

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (00:07 IST)
ஜெய்பீம் பட விவகாரத்தில்  சூர்யா, ஜோதிகா, ஞானவேல் மற்றும் அமேசான் ஓடிடி  நிறுவனத்தின் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு வன்னியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  அதில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொலை செய்திருக்கிறது…என்பதைக் காட்டுவதற்கு அந்த கொலையை செய்த காவலர் ஒரு வன்னியர் என்ற பொய்யை படக்குழு காட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் இயக்குனர்  மன்னிப்புக் கேட்ட பிறகும் இதுகுறித்த விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜெய்பீம் பட விவகாரத்தில்  சூர்யா, ஜோதிகா, ஞானவேல் மற்றும் அமேசான் ஓடிடி  நிறுவனத்தின் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சக்திவேல் இதுகுறித்த விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்