சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

ஞாயிறு, 16 ஜனவரி 2022 (18:30 IST)
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த பாடல் வெளியாகி உள்ளது
 
இந்த பாடல் கலர்ஃபுல்லாக இருப்பதாகவும் சூர்யா மற்றும் பிரியங்கா அருள்மோகன் செம டான்ஸ் ஆடி இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது. சூர்யா ஜோடியாக பிரியங்கா நடித்துள்ள இந்த படத்தில்  சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்