இன்று நேற்று நாளை இயக்குனரின் அடுத்த படமும் அந்த களம்தானா? சூர்யாவுக்காக உருவாகும் திரைக்கதை!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:53 IST)
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முதல் டைம் மிஷின் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து இப்போது உருவாக்கி வரும் அயலான் படமும் ஒரு அறிவியல் புனைவுக் கதைதான். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளது.

இப்போது அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ரவிக்குமார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. ரவிக்குமாரின் முந்தைய இரு படங்களைப் போலவே இந்த படமும் ஒரு அறிவியல் புனைவுக் கதைதானாம். 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் ஒரு கதையாக இந்த படம் உருவாக உள்ளதாம். படப்பிடிப்புக்கு முன்பாக ஒரு வருடம் முன் தயாரிப்பு பணியில் படக்குழு ஈடுபட உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்