’சூரரை போற்று’ இந்தி ரீமேக்கில் நடிப்பதை உறுதி செய்த சூர்யா!

புதன், 15 ஜூன் 2022 (18:30 IST)
’சூரரை போற்று’ இந்தி ரீமேக்கில் நடிப்பதை உறுதி செய்த சூர்யா!
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது என்பதும் சூர்யா நடித்த மாறா என்ற கேரக்டரில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
மேலும் இந்த படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார் என்றதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதூ.
 
இந்த நிலையில் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த தகவலை தற்போது சூர்யா உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் அக்ஷய் குமாருடன் நடிப்பதாகவும் இந்த அனுபவம் தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறி ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்