வெங்கட் பிரபுவின் அடுத்த படம் – டிவிட்டரில் சூர்யா அறிவிப்பு !

Webdunia
திங்கள், 20 மே 2019 (11:15 IST)
வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று டிவிட்டரில் வெளியாக இருக்கிறது.

வெங்கட்பிரபு தனது பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பாக படங்களை தயாரித்து வருகிறார். ஏற்கனவே ஆர் கே நகர் மற்றும் பார்ட்டி ஆகியப் படங்களை அவர் தயாரித்துள்ளார். அந்த இரண்டு படங்களும் ரிலிஸுக்கு தயாராக இருக்க இப்போது தனது அடுத்த தயாரிப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தினை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து வெங்கட்பிரபு தயாரிக்க சிம்புதேவன் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள இந்தப்படத்தின் பெயரை இன்று மாலை 7 மணிக்கு டிவிட்டரில் சூர்யா வெளியிட இருக்கிறார். சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படம் பிரச்சனைகளால் பாதியில் நிற்பதால் இந்த படத்தினை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்புதேவன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்