சூர்யாவுடன் இணையும் குடும்ப செண்ட்டிமெண்ட் இயக்குனர் – வாயைப் பிளக்க வைத்த தகவல்!

சனி, 25 ஜூலை 2020 (17:42 IST)
நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா அடுத்ததாக அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ஆனால் இந்த படங்களில் முதலில் எதில் நடிப்பார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

குடும்ப செண்ட்டிமெண்ட் படங்களாக இயக்கி வரிசையாக இயக்கி வெற்றி பெற்றுள்ள இயக்குனர் பாண்டிராஜ் சூர்யாவை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கனவே பாண்டிராஜின் பசங்க 2 படத்தை  தயாரித்ததோடு மட்டுமில்லாமல் அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் சூர்யா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்