தனுஷ் வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி… ரசிகர்களிடம் எகிறிய எதிர்ப்பார்ப்பு !

வெள்ளி, 24 ஜூலை 2020 (16:58 IST)
நடிகர் தனுஷுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து உருக்கிவாகிய பொல்லாதவன், ஆடுகளம், வெட்கை நாவலை அடிப்படையாகக் கொண்ட அசுரன் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைடுத்து நடிகர் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல் பட அறிவிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி தானு வெளியிட்டார்.

இதற்கிடையே சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கிவரும் படத்தின் சில ஷூட்டிங்  காட்சிகள் மீதியுள்ளதாகவும் இந்த இரு படங்களை முடித்துவிட்டு வெற்றிமாறன் அடுத்து, தனுஷை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்