கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடிக்க பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் வெளியாகி முதல் காட்சி முடிந்து ரசிகர்களின் விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
அனாதைக் குழந்தையாக இருக்கும் பாரிவேலை உள்ளூர் லோக்கல் தாதாவான திலகன் தன்னுடைய லாபத்துக்காக எடுத்து வளர்க்கிறார். ருக்மிணி மீதான காதலால் பாரிவேல் அடிதடியில் இருந்து வெளியேற முடிவெடுக்கிறார். ஆனால் இது அவரின் வளர்ப்புத் தந்தைக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் சிக்கலை உண்டாக்க, பாரிவேலையும் அவள் காதலியையும் துரத்துகின்றனர். தன் காதலியை தேடி அந்தமான் அருகே உள்ள கன்னித்தீவுக்கு செல்லும் பாரிவேல் தன் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தாரா என்பதே கதை.
இதற்குள் நகைச்சுவை, ஆக்ஷன், எமோஷனல் ட்ராமா, சர்வாதிகாரம் பற்றிய விமர்சனம் என கலந்துகட்டி மசாலா படமாக எடுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.. ஆனால் படத்தின் நீளம் ரசிகர்களை உச் கொட்ட வைக்கிறது. காதல், நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் ரசிகர்களோடு கனெக்ட் ஆகாமல் தேமே என்று செல்கின்றன. பக்காவான ஆக்ஷன் காட்சிகள் அவ்வப்போது பார்வையாளர்களை நிமிர்ந்து உக்கார வைக்கிறது. இதன் காரணமாக படம் கலவையான உணர்வையேத் தருகிறது. ஆனால் சூர்யாவின் சமீபத்தைய படங்களான எதற்கும் துணிந்தவன் மற்றும் கங்குவா படங்களைப் பார்த்து அதிருப்தியில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஆறுதலானப் படமாக ரெட்ரோ இருக்கும்.