கங்குவா படப்பிடிப்பில் திடீர் விபத்து: சூர்யாவுக்கு என்ன ஆச்சு?

வியாழன், 23 நவம்பர் 2023 (12:59 IST)
சூர்யா நடித்த கங்குவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் இன்றைய படப்பிடிப்பின் போது திடீரென ஏற்பட்ட விபத்தில் சூர்யா நூலிழையில் உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ரோப் கேமரா திடீரென அறுந்து விழுந்ததாகவும்  இதனால் சூர்யாவின் தோள்பட்டையில் லேசான காயம் அடைந்ததாகவும் தெரிகிறது.
 
சூர்யா தற்போது நலமாக இருப்பதாகவும் அவருக்கு வேறு எந்த காயமும் இல்லை என்றும் கங்குவா படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சூர்யா படப்பிடிப்பில் விபத்து என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் சூர்யாவுக்கு லேசான காயம் என்ற தகவல் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்