துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

vinoth

திங்கள், 17 ஜூன் 2024 (18:59 IST)
சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் இயக்கி முடித்துள்ளார் சுதா கொங்கரா. அந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில்  மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க இருந்தது .இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி கவனம் பெற்றது.

ஆனால் திடீரென இந்த படம் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இந்த படம் ட்ராப் ஆகிவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இதற்கு சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுதா கொங்கரா தனது இந்தி பட ரிலீஸூக்குப் பிறகு துருவ் விக்ரம்மை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் ஒரு காதல் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்