பிரேம்ஜி நடித்துள்ள சத்தியசோதனை… இணையத்தில் கவனம் ஈர்க்கும் டிரைலர்!

புதன், 12 ஜூலை 2023 (09:56 IST)
2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு எனும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் சுரேஷ் சங்கையா. இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிகர் செந்திலைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸாகவில்லை.

அதற்கடுத்து அவர் பிரேம்ஜி அமரனைக் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அவர் இயக்கியுள்ள சத்தியசோதனை படம் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஒரு காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க செல்லும் பிரேம்ஜி அமரன் என்ன வகையிலான சிக்கல்களில் எல்லாம் சிக்கிக் கொள்கிறார் என்பது பற்றி நகைச்சுவையான கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்தபடத்தின் இரண்டாவது டிரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்