போதை மருந்து கொடுத்து நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர்: திடுக்கிடும் தகவல்

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (18:20 IST)
பிரபல நடிகை ஒருவரை அவ்வப்போது போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து, அந்த நடிகையை கர்ப்பமாக்கிய நடிகர் குறித்த பரபரப்பு தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகை ஒருவர், துணை நடிகர் ஒருவருடன் கடந்த சில நாட்களாக நெருக்கமாக பழகி உள்ளார். இருவரும் அடிக்கடி ஓட்டலில் ரூம் எடுத்து மது அருந்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்
 
இந்த நிலையில் ஒரு நாள் மதுவில் போதை மருந்து கலப்படம் செய்து நடிகைக்கு துணை நடிகர் கொடுத்ததாக தெரிகிறது. அதன் பின்னர் அந்த நடிகையை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் ஓரிரண்டு முறை அவர் அந்த நடிகையை அவருக்கே தெரியாமல் பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த நடிகை தற்போது கர்ப்பம் அடைந்துள்ளார்
 
இதனை அடுத்து துணை நடிகரிடம் சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது நீதான் என்றும், அதனால் நீயே என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நடிகை முறையிட்டுள்ளார். ஆனால் அந்த நடிகர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
 
இதனை அடுத்து அந்த தொலைக்காட்சி நடிகை காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய காவல்துறையினர் முயன்றபோது, துணை நடிகர் தலைமறைவாகி உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர் 
 
ஒரு நடிகையை அவருடன் பழகிய துணை நடிகர் ஒருவர் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்