சிவாவுக்கு கேக் ஊட்டிவிட்ட சூப்பர் ஸ்டார் !

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (18:05 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் சிவாவின் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி கேக் ஊட்டிவிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் சிறுத்தை சிவா. இவர் இன்று தனது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.

இவருக்கு ரசிகர்கள் , சினிமா நட்சத்திரங்கள், சினிமா கலைஞர்கள் உள்ளிட்ட  பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2008 ஆண்டு சவுர்யம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக சிவா அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கி கமர்ஷியல் இயக்குநராக வலம் வலம் வருகிறார்.

இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் – நயன் தாரா, கீர்த்திசுரேஷ், நடிப்பில் அண்ணாத்த என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இன்று சிவாவின் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி கேக் ஊட்டிவிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.#HBDDirectorSiva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்