சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்தகட்டமாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டது.
முதல்கட்டமாக டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கிவிட்டது. சற்று முன்னர் ரஜினிகாந்த் டப்பிங் தியேட்டருக்கு வந்து தனது பகுதிக்கான டப்பிங் பணியை தொடங்கினார். அவர் இன்னும் ஓரிரு நாட்கள் டப்பிங் குரல் கொடுப்பார் என்றும் அதனையடுத்து எமிஜாக்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் டப்பிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
'பாகுபலி 2' வசூலை முறியடிக்கும் வாய்ப்பு உள்ள ஒரே படம் '2.0' படம் தான் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதே இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாம், இந்த படத்தின் தமிழக உரிமை மட்டுமே ரூ.60 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.