ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

Mahendran
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (17:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவர் தனது ரசிகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நன்றி கூறி தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை என தெரிவித்த ரஜினிகாந்த் அதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கவர்னர் ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்படத் துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மேலும், நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய, என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமாற மனமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்