சூரி படத்திற்கு சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பு !

புதன், 31 மார்ச் 2021 (23:05 IST)
வெற்றிமாறன்-சூரி படத்திற்கு சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அசுரன் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் புதிய படம் உருவாகிவருவதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் சூரி மற்றும் பாரதிராஜா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் கதை ’துணைவன்’ என்ற சிறுகதையில் இருந்து திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது

ஆனந்தவிகடனில் 1992ஆம் ஆண்டு ஜெயமோகன் எழுதிய ’துணைவன்’ என்ற சிறுகதைதான் வெற்றிமாறன்-சூரி படத்தின் கதை என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்திற்கு ரஜினி படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த 1986 ஆம் ஆண்டு ரஜினி, சிவாஜி கணேசன், விஷ்ணுவர்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் பெயரை இப்படத்திற்கு வைக்கவுள்ளதாகவும் இப்படத் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வெற்றிமாறனின் முதல் படம் ரஜினியின் பொல்லாதவன் படத்தலைப்பு சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக 40 நாட்கள் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்