சூரிய நமஸ்காரம் எப்போது யாரெல்லாம் செய்யலாம்...?

சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம்.
 

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.

நம் உடலில் ஏராளமான நச்சுப்பொருட்கள் உண்டு. சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் உடலில் ஆக்ஸிஜன் செயல்பாடு சீராகும். இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு கூடுகிற போது இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் உடலின் நச்சுக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 
சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையாக வரும். 
 
ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம். பின் உங்களால் இயன்ற முறை செய்யலாம். ஆனால் அதிக வலிவுடனோ அல்லது மிகவும் சிரமப்பட்டு செய்வது மிகவும் தவறு.
 
கர்ப்பிணிகள் 3 மாதங்கள் வரை செய்யலாம். பிறகு நிறுத்தி விடவேண்டும். குழந்தை பிறந்த பின் தக்க ஆலோசனையுடன் சிறிது சிறிதாகப் பயிற்சியை அதிகரிக்க  வேண்டும்.
 
காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்