2 நாட்களில் ரூ.125 கோடி வசூல் செய்த ஜெயிலர் .. இன்று 200 கோடியை எட்டுமா?

சனி, 12 ஆகஸ்ட் 2023 (13:13 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி முதல் நாள் 80 கோடியும் இரண்டாம் நாளில் 72 கோடியும் வசூல் செய்ததாக தகவல் வழியாக உள்ளன.  இரண்டு நாட்களில் ரூ.152 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மூன்றாவது நாள் இந்த படம் 200 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதுமட்டுமின்றி சனி ஞாயிறு விடுமுறை நாள் என்பதாலும் வரும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் முதல் ஐந்து நாள் வசூல் 400 கோடியை தொடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
ஜெயிலர் திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதை அடுத்து படம் பார்க்க கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. 
 
மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்